சனி, 29 நவம்பர், 2008

பனித்துளி

இரவின் கர்ப்பத்திலிருந்து
விடியலில் பிறந்த
அழகிய குழந்தை - பனித்துளி !

சனி, 8 நவம்பர், 2008

நானும் நீயும்

வானும் புவியும்
முத்தமிடும் இடத்திற்கு
இருவரும் சேர்ந்தே போவோமா ?
மனிதர் சத்தம் இல்லா இடத்தில்
நீயென் பக்கம் இருப்பாயா ?


காதல் (என்னுள்) பெருக
கண்கள் (உன்னை) பருக
மனதோ (கொஞ்சம்) கிறங்க
அன்பே (அருகில்) வருக !

வெள்ளி, 7 நவம்பர், 2008

வேலையும் வாழ்க்கையும்

எப்.எம். சிணுங்கல்கள் தாலாட்டும் இல்லை
பஸ்ஸின் குலுங்கல்கள் தொட்டிலும் இல்லை
ஆனாலும் உறங்கிப் போகின்றேன்,
சொந்தங்களையும்
நட்பின் பந்தங்களையும்
பிரிந்த இதயம்
சோர்ந்து போவதால் . . .

அம்மாவிடம் கொஞ்சி கொஞ்சி,
அப்பாவிடம் கெஞ்சி கெஞ்சி,
வாங்கிய 100 ரூபாயைவிட - 1ஆம் தேதி
தவறாமல் வரும்
10000 ரூபாய்க்கும் கூடுதலான சம்பளம்
சிறிதாகவே தோன்றுகின்றது !
இயந்திரம் போலாகிவிட்ட வாழ்க்கையால் . . .