வெள்ளி, 25 செப்டம்பர், 2009

காதல்

உறக்கம் இல்லா இரவிலும்,
உள்ளிருக்கும் ஒரு சுகம் . . .

தனியாய் செல்லும் போதும்,
தன்னை அறியாமல் பேசவைக்கும் . . .

விழிகளில் விளையாடி,
இதயத்தை வருடும் . . .

தன்னையே அர்ப்பணித்து,
அன்பையே எதிர்பார்க்கும் . . .

இன்னும் என்ன சொல்ல ?

உணர்வுகளை முழுமையாய் சொல்ல
இன்னும் எந்த மொழியிலும்
எழுத்து வடிவம் இல்லை,

காதலில்
உன்னதமான உணர்வுகளைத் தவிர
வேறு எதற்கும் இடம் இல்லை !

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

நட்பின் இசை

நீயில்லாத இந்த நாட்களை,
நாம் விரும்பும் இசை கொண்டு நிரப்புகின்றேன் . . .

உன் அன்பால் நிறைந்த என் இதயத்தை,
இசையால் நிரப்ப முடியவில்லை !

காத்திருப்பேன். . . நட்புக்காக. . .

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !

நன்மை தீமை எடுத்துரைத்தாய்
நம்மால் ஆன வரை நல்லதையே செய்வோம் என்றாய்

உண்மை அன்பை நீ தந்தாய்
உனக்காகவே இருப்பேன் என்று உறுதி சொன்னாய்

வீழும்போது தாங்கி நின்றாய்
வெற்றி பெறவே தோள் கொடுத்தாய்

அழும்போது அரவணைத்தாய்
அன்பு காட்டினால் அகம் மகிழ்ந்தாய்

கோபம் வரும்போது சாந்தம் செய்தாய்
சோம்பல் கொண்டால் சாதனைத் தீ ஏற்றினாய்

தனிமைத் துயர் துடைத்து நின்றாய்
தன்னலம் கருதாமல் உதவிகள் புரிந்தாய்

உரிமை கொண்டு அறிவுரை சொன்னாய்
உள்ளம் உயரவும் வழிகாட்டினாய்

நட்பே நீ என்னுள் நிறைந்தாய்,
நான் உன்னுள் துளிர்த்தேன் !


நட்பெனும் ஆன்ம உணர்வை பகிர்ந்து கொள்ளும் இனிய இதயங்களுக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள் !

வியாழன், 30 ஏப்ரல், 2009

என்னைத் தேடி . . .

நீ என்னை
மறந்து போனதிலிருந்து,
என்னைத் தேடுகின்றேன் . . .
எங்கெங்கோ ?!

புதன், 25 மார்ச், 2009

உன் நினைவில் . . .

ஒரு கணம்,
ஒரு முறுவல்,
ஒரு பார்வை,
ஒரு துளி கண்ணீர்,
காதல்,
உன் நினைவில்
நான்.