காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

காதல் பித்து

உன்னோடு பேச,
காரணம் தேவையில்லை
நேரம் தேவையில்லை
வார்த்தை தேவையில்லை
செய்கை தேவையில்லை

ஏன், நீயே தேவையில்லை..

ஆம், 
இந்த காதல் பித்து போதும்!
இந்த உள்ளம் உவந்து போகும்!

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

காதல்

உறக்கம் இல்லா இரவிலும்,
உள்ளிருக்கும் ஒரு சுகம் . . .

தனியாய் செல்லும் போதும்,
தன்னை அறியாமல் பேசவைக்கும் . . .

விழிகளில் விளையாடி,
இதயத்தை வருடும் . . .

தன்னையே அர்ப்பணித்து,
அன்பையே எதிர்பார்க்கும் . . .

இன்னும் என்ன சொல்ல ?

உணர்வுகளை முழுமையாய் சொல்ல
இன்னும் எந்த மொழியிலும்
எழுத்து வடிவம் இல்லை,

காதலில்
உன்னதமான உணர்வுகளைத் தவிர
வேறு எதற்கும் இடம் இல்லை !

வியாழன், 30 ஏப்ரல், 2009

என்னைத் தேடி . . .

நீ என்னை
மறந்து போனதிலிருந்து,
என்னைத் தேடுகின்றேன் . . .
எங்கெங்கோ ?!

சனி, 8 நவம்பர், 2008

நானும் நீயும்

வானும் புவியும்
முத்தமிடும் இடத்திற்கு
இருவரும் சேர்ந்தே போவோமா ?
மனிதர் சத்தம் இல்லா இடத்தில்
நீயென் பக்கம் இருப்பாயா ?


காதல் (என்னுள்) பெருக
கண்கள் (உன்னை) பருக
மனதோ (கொஞ்சம்) கிறங்க
அன்பே (அருகில்) வருக !

வியாழன், 2 அக்டோபர், 2008

பாதச்சுவடு

கடற்கரை மணலில்
ஆயிரம் பாதச்சுவடுகள் இருந்தாலும்
உன் பாதச்சுவடுகளை 
என்னால் அடையாளம் காண முடியும் . . .

உன் பாதம்பட்டு
பூக்கும் பூக்களை
என் காதல் 
கண்டுபிடித்துவிடும் !

புதன், 1 அக்டோபர், 2008

வாழ்க்கைத்துணை

உன் மேல் 
அன்பு செலுத்தும்பொழுது 
நினைத்தேன்
”என் வாழ்க்கைக்கு நீயே துணை !”

உன் அன்பில் 
திளைக்கும் பொழுது
தெரிந்துகொண்டேன்
”என் வாழ்க்கையே 
உன்னோடு 
நான் வாழ துணை !”

திங்கள், 22 செப்டம்பர், 2008

முத்தமின்சாரம்

நீ
ரோஜா இதழ்களால்
முத்தமிட்டாலும்
என்னுள்
மின்சாரம் பாய்வது
எதனால் ?

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

எனக்காகவே துடிக்கிறாய்

உனக்கு இதயமே இல்லை
உன் மீது கருணை இல்லாததால் . . .

நீயே என் இதயம்,
எனக்காகவே துடிப்பதால் !